என்ன ஆச்சு உங்களுக்கு...! திருமணமான ஒரு வாரத்தில் 2வது முறை மருத்துவமனை சென்ற சோனாக்‌ஷி சின்ஹா..! 

 
1

பிரபல பாலிவுட் நடிகர் சத்ருஹன் சின்கா மகள் சோனாக்‌ஷி சின்ஹா பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் என்பதும் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ லிங்கா’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் என்பதும் தெரிந்தது. மேலும் ரஜினிகாந்த் மற்றும் சத்ருஹன் சிங் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா தனது கணவருடன் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றதாகவும் அது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதாகவும் செய்திகள் வெளியானது. ஒரே வாரத்தில் அவர் கர்ப்பமாகிவிட்டாரா? கர்ப்ப சோதனைக்காக தான் அவர் மருத்துவமனை சென்றாரா? என சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி கொண்டிருந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் 2வது முறையாக மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
சோனாக்‌ஷி சின்ஹாவின் தந்தை சத்ருஹன் சின்ஹா உடல் நலக்குறைவுக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அவரை பார்ப்பதற்காக சோனாக்‌ஷி சின்ஹா மருத்துவமனைக்கு சென்றதாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளன. சோனாக்‌ஷி சின்ஹா தந்தைக்கு சில நாட்களாக காய்ச்சல் இருந்ததாகவும் தற்போது அவரை மருத்துவமனையில் அனுமதித்து உள்ளதாகவும்,  சத்ருஹன் சின்ஹாவின் மகன் மீடியாக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தனது தந்தைக்கு வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் இன்று அல்லது நாளை வீட்டுக்கு திரும்பி வருவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து சோனாக்‌ஷி சின்ஹா 2வது முறை மருத்துவமனை சென்றதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

From Around the web