நான் எப்போ அப்படி சொன்னேன். உண்மையை சொல்லிய நித்யா மேனன்!
இன்றைய காலகட்டத்தில் திறமையான நடிப்பை வெளிக்காட்டினால் எப்படி இருந்தாலும் சினிமாவில் ஜெயிக்கலாம் என காட்டி வருபவர் தான் நடிகை நித்யா மேனன்.
இவருக்கு கொஞ்சம் உடல் பருமனாக,உயரம் குறைவாக இருந்தும் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.தன்னுடைய அசாத்திய நடிப்பால் மக்களை கவர்ந்துள்ளார் இவர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்து அசத்தி வருகிறார்…அதனை போல பாடல்களும் பாடுவது இவரின் வழக்கம்,இந்த நிலையில் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் நடிகை நித்யா மேனன் பேசினார் என்று ஒரு தகவல் வந்துளளது அதாவது தெலுங்கு சினிமாவில் இதுவரை நான் எந்த ஒரு பிரச்சனையையும் சந்தித்தது இல்லை.
ஆனால் தமிழ் திரையுலகில் நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டு இருக்கிறேன். தமிழ் ஹீரோ ஒருவர் என்னை படப்பிடிப்பு சமயத்தில் துன்புறுத்தினார்” என்று அதில் பேசி இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்திகள் உலாவுகின்றன.அது அனைவர்க்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.இதனை கேட்ட ரசிகர்கள். யார் அந்த ஹீரோ என கேள்வி கேட்டு வருகின்றனர்…இந்நிலையில் அதனை முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அது பொய் என சொல்லி தகவலுக்கு ஒரு ஸ்டாப் வைத்து விட்டார்.