ரன்பீர் கபூரை முதன்முதலில் சந்தித்தது எப்போது..?  ஆலியா பட் பகிர்ந்த தகவல்!

 
1

 நடிகை ஆலியாபட் கடந்த 2022ம் ஆண்டு இந்தி நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ராகா என்று பெயரிட்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகை ஆலியா பட், ரன்பீர் கபூரை முதன்முதலில் சந்தித்தது எப்போது என்பது குறித்து பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்:-

திரைப்படத் தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி ஆடிஷன் நடத்தினார். அப்போது எனக்கு வயது 9. அந்த ஆடிஷனில் நான் என் அம்மாவுடன் சென்று கலந்துகொண்டேன். அப்போதுதான் ரன்பீரை முதன்முதலில் பார்த்தேன். அங்கு அவர் சஞ்சய் லீலா பன்சாலியிடன் உதவி இயக்குனராக இருந்தார். அப்போது நான் பயத்தில் இருந்ததால் ரன்பீரைக் கூட கவனிக்காமல், பன்சாலி மீது மட்டுமே என் கவனம் இருந்தது. அப்போது நான் நினைக்கவில்லை, ரன்பீர்தான் என் வாழ்வில் முக்கிய அங்கமாக இருப்பார் என்று. இவ்வாறு அவர் கூறினார்.

From Around the web