என்னுடைய 19 வயதில் அந்தரங்க டார்ச்சர் கொடுத்தார் இந்த தயாரிப்பாளர்..! 

 
1

மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் காதலியான அங்கிதா லோகண்டே,1984 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் டிசம்பர் 19 ஆம் தேதி பிறந்தார். இவருக்கும் சுஷாந்த் சிங்கிற்கும் பவித்ர ரிஷ்தா என்ற தொடரில் நடித்தபோது காதல் மலர்ந்தது. இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில், 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொள்ள போவதாக அறிவித்தனர். பின் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

இதையடுத்து, சுஷாந்த் சிங் ராஜ்புத் 2020 ஆம் ஆண்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவரை நினைத்து வருத்தத்துடன் அங்கிதா பதிவுகளையும் வெளியிட்டிருந்தார். இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு இவர் விக்கி ஜெயின் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 17வது சீசனில் பங்கேற்ற அங்கிதா லோகண்டே 3வது இடத்தைப் பிடித்தார்.

அங்கிதா லோகண்டே ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், சினிமாவில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன், மும்பையில் வாய்ப்பு தேடி அலைந்த போது, ஆடிஷனுக்கு சென்ற போது, தயாரிப்பாளர் தன்னை அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொன்னார் என்றும், தென்னிந்திய திரைப்படம் ஒன்றில் ஹீரோயினாக கமிட் ஆனேன் அப்போது இந்த தயாரிப்பாளர் தன்னை படுக்கைக்கு அழைத்தார். அப்போது எனக்கு 19 வயது தான் ஆகியிருந்தது.

இதுகுறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் காதலியான அங்கிதா லோகண்டே, தன்னை தென்னிந்திய தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்ததாக கூறியுள்ளார். படுக்கைக்கு அழைத்தார்கள் என்று சொல்ல தைரியம் இருக்கும் அங்கிதாவிற்கு, அந்த தயாரிப்பாளர் யார் என்று சொல்லுவதில் என்ன தயக்கம் என்று புரியவில்லை. முதலில் அதை சொல்லுங்க என்று அந்த நடிகையை விளாசி உள்ளார்.

 

From Around the web