இயக்குநர் தாமதமாக வீடு சென்றபோது... சீனு ராமசாமி விவாகரத்து குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன்..! 

 
1

யூட்யூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’சீனு ராமசாமி மதுரையில் பிறந்தார். மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் கல்லூரியில் பட்டம்பெற்றார். ஆரம்பகாலத்தில் இவர் சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். அதன்பின் சினிமா மோகம் காரணமாக, ஒளிப்பதிவாளர் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக சேர்ந்தார். இவர் இயற்கையிலேயே எழுதும் வல்லமைப் படைத்தவர். பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். பெரும்பாலும் இவரது புத்தகங்கள் மதுரையை அடிப்படையாகக் கொண்ட புத்தகங்களே. மதுரையை அதன் வரலாற்றுப் பின்னணியோடு எழுதும் ஆற்றல் படைத்தவர், சீனு ராமசாமி.


அடிப்படையில் இவர் ஒரு எழுத்தாளர். தனது எழுத்துக்களை கேமரா மூலமாக வெளியே கொண்டு வந்தார். இவர் எழுதி இயக்கிய முதல் படம், ‘கூடல் நகர்’. மதுரைக்கு இன்னொரு பெயர் கூடல் மாநகரம். தான் பிறந்த ஊருக்குப் பெருமைசேர்க்கும் வகையில் கூடல் நகர் படத்தை எடுத்தார். அதன் பிறகு, தென்மேற்குப் பருவக்காற்று என்ற மண் சார்ந்த வாழ்வியல் படத்தை எடுத்தார். இந்தப்படத்தில் தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாநாயகனாக அறிமுகம் ஆனார். மக்கள் செல்வன் என்ற பட்டத்தை, விஜய் சேதுபதிக்கு வழங்கியவரே சீனு ராமசாமி தான். மூன்று தேசிய விருதுகளை வென்றது தென்மேற்குப் பருவக்காற்று.


அதன்பின், இவர் பல படங்களை இயக்கினாலும், இவரது தர்மதுரை வசூலில் சாதனைப் படைத்தது. இந்தப் படத்திலும் விஜய்சேதுபதி தான் கதாநாயகனாக நடித்தார். இந்தப் படத்தை ஆர்.கே.சுரேஷ் தயாரித்து இருந்தார். சமீபத்தில் இவர் எழுதி இயக்கிய படம், கோழிப்பண்ணை செல்லத்துரை. ஒரு இளைஞரின் வாழ்வியல், கோழிப்பண்ணை செல்லத்துரை. இந்தப் படம் விமர்சன ரீதியாகப் பாராட்டைப்பெற்றது. நான் கூட, சிறந்த விமர்சனத்தைக் கொடுத்து இருந்தேன். துரதிர்ஷ்டவசமாக சிறந்த படங்களை சிலநேரம் மக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். ஆனால், ஓடிடியில் இப்படம் நிறையபேரால் பார்க்கப்பட்டு, பெரிய பாராட்டைப் பெற்றது.


இவர் தர்ஷனா என்பவரை திருமணம் செய்து, 17 வருடம் இல்லற வாழ்வில் இருந்தார். ஆனால், எந்தவொரு கிசுகிசுவும் வராமலேயே இந்த ஒரு விவாகரத்து அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறார், சீனு ராமசாமி.


2013ஆம் ஆண்டு, இடம் பொருள் ஏவல் என்னும் படத்தை இயக்கிக்கொண்டிருந்தார், சீனு ராமசாமி. அந்தப் படத்தில் ஆரம்பத்தில் நடித்த நடிகை மனிஷா யாதவை பாலியல் சீண்டல் செய்திருக்கிறார், சீனு ராமசாமி என அந்த நடிகை புகார் அளித்திருக்கிறார். ஆனால், மனிஷா யாதவ் அதற்கு எந்த ஒரு ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை.

மற்றபடி, கிசுகிசுக்கள் எதுவும் வந்தது இல்லை. ஆனால், திடீரென்று விவாகரத்து பற்றி பேசியிருக்கிறார் என்றால், அவருக்கும் தொழில் பிரச்னைகள் இருக்கும் பாடி டிமாண்ட் இருக்கும் என்பதை ஹவுஸ் வொய்ஃப் புரிந்துகொள்வதில்லை. இயக்குநர் தாமதமாக வீடு சென்றபோது, மனைவியுடம் அன்பு செலுத்தமுடியாமல் போயிருக்கும். வெளிப்புற படப்பிடிப்புகளுக்கு இயக்குநர் போவது இருக்கும் நிலையில் அதை மனைவிமார்கள் புரிந்துகொண்டால் எந்தப்பிரச்னையும் இல்லாது இருக்கும்'' என பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.
 

From Around the web