எப்போது குழந்தையை எதிர்பார்க்கலாம்..? விக்னேஷ் சிவன் நாசூக்கான பதில்..!

 
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்

ரசிகர்களுடன் சமூகவலைதளத்தில் கலந்துரையாடிய இயக்குநர் விக்னேஷ் சிவன், பல்வேறு தனிப்பட்ட கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்து பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

நடிகை நயன்தாராவை ஆறு வருடங்களாக காதலித்து வரும் இயக்குநர் விக்னேஷ் சிவன், அவர் நடிப்பில் ‘நெற்றிக்கண்’ என்கிற படத்தை தயாரித்துள்ளார். அதேபோல விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தாவை வைத்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை இயக்கி வருகிறார். இதற்கான படப்பிடிப்பு விரைவில் ஹைதராபாத்தில் துவங்கவுள்ளது.

தற்போது நெற்றிக்கண் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் துவங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். நயன்தாராவுடன் திருமணம் எப்போது என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, கொரோனா முடிந்தவுடன் என்று கூறி இருந்தார்.

அதேபோல மற்றொரு ரசிகர், குழந்தையை எதிர்பார்க்கலாமா? என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன், குழந்தை பெற்றுக்கொள்வது உங்களுடைய பார்டனர் மற்றும் உங்களுடைய முடிவை பொறுத்தது என்று நாசூக்காக கூறினார். விக்னேஷ் சிவனின் இந்த பதில் சமூகவலைதளங்களில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

From Around the web