திருமணம் எப்போது..? சனம் ஷெட்டியின் பதில் இதுதான்..!
 

 
சனம் ஷெட்டி

சமூகவலைதளத்தில் ரசிகர் ஒருவரின் திருமணம் குறித்த கேள்விக்கு சனம் ஷெட்டி அளித்த பதில் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் சனம் ஷெட்டி. நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் பலர் சமூகவலைதளங்களில் பதிவிட்டனர்.

இதை தொடர்ந்து அவருக்கு மக்களிடையே மிகப்பெரிய ஆதரவு உருவானது. தற்போது பல்வேறு படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பிஸியாக உள்ளார். இந்நிலையில் சமூகவலைதளங்களில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து அவர் பேசினார்.

அப்போது ரசிகர் ஒருவர் எப்போது திருமணம் செய்துகொள்ள உள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், நான் ஏற்கனவே ஒருவரை காதலித்தேன். அது திருமணம்வரை சென்று கடைசி நேரத்தில் நின்று விட்டது. நாம் ஒன்று நினைத்தால் இறைவன் ஒன்று நினைக்கிறான். எனது திருமணத்திற்கான காலம் நேரம் இன்னும் வரவில்லை என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

நடிகர் தர்ஷனை விட்டு சனம் ஷெட்டி வேறொரு நபரை காதலித்து வந்தார். அவருடன் காதலர் தினம் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டார். அது மிகவும் வைரலானது. தற்போது திருமணம் குறித்த கேள்விக்கு விரக்தியுடன் பதிலளித்துள்ளார் சனம். இதன்மூலம் அந்த காதலும் சனம் ஷெட்டிக்கு தோல்வியை தந்துள்ளதாகவே தெரிகிறது.
 

From Around the web