'ஆவேசம்'  தமிழில் எப்போது ஓ.டி.டி.,யில் வெளியாகும்..! வெளியான முக்கிய அப்டேட்..! 

 
1

பிரமயுகம், மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு, ஆடு ஜீவிதம்  என அடுத்தடுத்து வெளியான மலையாள படங்கள்   அமோகமான வரவேற்பை பெற்றன. அந்த அந்த வரிசையில் பகத் பாசில் நடித்து வெளியான 'ஆவேசம்' திரைப்படமும் இணைந்துள்ளது.

ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடித்த ஆவேஷம் படம் கடந்த ஏப்ரல் மாதம் 11ம் தேதி திரையரங்குகளில்  வெளியானது. இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  

இப்படத்தில்  பகத் பாசில்  அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இளைஞர்களை கவரும் விதமான கதையம்சத்தை படம் கொண்டுள்ளது.  

ஆவேசம் படம்  ஓ.டி.டி.,யில் மே 9 ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது.  இந்நிலையில் வரும் ஜூன் 21ம் தேதி அமேசான் பிரைமில்  ஆவேஷம் படம் தமிழில் வெளியாகயுள்ளது என தகவல்கள் கூறுகின்றன.

From Around the web