குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது துவங்கும்..? துளைத்தெடுக்கும் ரசிகர்கள்..!

 
1

பிரபல தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி எப்போது துவங்கும்  என்று பல ரசிகர்கள் கேட்டு கேள்விக்கு தொடர்பாக புதிய தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதை தொடர்ந்து ஒளிப்பரப்பான இரண்டாவது சீசனும் பார்வையாளர்களிடம் கொண்டாடப்பட்டது.

தமிழக ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ‘பிக்பாஸ்’-யை விட இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பு அதிகரித்தது. நிகழ்ச்சியின் போட்டியாளர்களாகவும் கோமாளிகளாகவும் பங்கெடுத்த பலரும் மேலும் பிரபலமாகினர்.

இந்நிலையில்  குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் எப்போது துவங்கப்படும் என ரசிகர்கள் தொடர்ந்து தயாரிப்புக் குழுவை கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது இதுதொடர்பாக புதிஅ அப்டேட் கிடைத்துள்ளது.

அதன்படி புதிய சீசனிலும் ஏற்கனவே இருந்த கோமாளிகள் தொடர்வார்கள். அதேபோல நடுவர்களை மார்ற திட்டம் ஏதுமில்லை. ஆனால் போட்டியாளர்கள் அனைவரும் புதியவர்கள். அதன்படி முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் இருந்து குரோஸி புகழுக்கு பதிலாக புதிய கோமாளியாக சீசன் 3-யில் வலம் வருவார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
 

From Around the web