டிமான்ட்டி காலனி 2 ரிலீஸ் எப்போது தெரியுமா..?
தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அருள்நிதி இவரது நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு திரைக்கு வந்து மாபெரும் வெற்றியை பதிவு செய்த படமே டிமான்ட்டி காலனி.
இந்நிலையில் மிரட்டலான அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் திட்டத்தட்ட 9 வருடங்களுக்குப்பின், தற்போது உருவாகி உள்ளது . முதல் பாகம் போல் இந்தப் படத்திலும் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடித்துள்ளார் .
சாம் சி எஸ் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி டிமான்ட்டி காலனி திரைப்படம் ஆகஸ்ட் 15 ம் தேதி வெளியிட படக்குழு திட்டிமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து தற்போது வரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.