‘மதராஸி’ ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Apr 15, 2025, 06:05 IST

‘மதராஸி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளுக்கு வரவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் புதிய போஸ்டர் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்திருக்க மேலும் பிஜு மேனன், வித்யூத் ஜம்வால், , விக்ராந்த், ஷபீர் கல்லரைகல், பிரேம் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க, ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் இந்த மெகா பஜெட் படத்தை சுமார் ₹200 கோடி செலவில் உருவாக்கி வருகிறது.
#Madharasi #MadharasiFromSep5 😊👍 pic.twitter.com/qVRIFNHTUc
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) April 14, 2025