மேலும் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமான நயன்தாரா- திருமணம் எப்போது..?

 
நயன்தாரா

இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகும் நிலையில், அவர் நடிக்கும் இரண்டு புதிய படங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகை நயன்தாரா நடிப்பில் ஏற்கனவே ‘நெற்றிக்கண்’ படம் முடிக்கப்பட்டு ஓடிடி ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. அதை தொடர்ந்து ரஜினிகாந்துடன் ‘அண்ணாத்த’, விஜய் சேதுபதியுடன் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் நடிக்கும் இரண்டு புதிய படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி.பிள்ளை என்பவர் இவ்விரண்டு படங்களையும் தயாரிக்கிறார். அதில் ஒரு படத்தை புதுமுக இயக்குனர் விப்பின் என்பவர் இயக்கவுள்ளார்.

இப்படம் முழுக்க முழுக்க சைக்கலாஜிக்கல் மிஸ்டிரி த்ரில்லர் பாணியில் தயாராகவுள்ளது. இந்த வகை படங்கள் நயன்தாராவுக்கு கைக்கொடுக்கும் என்பதால் அவர் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

மற்றொரு படத்தை இயக்குவது யார் என்கிற விபரம் இதுவரை வெளியாகவில்லை. இதற்கிடையில் நயன்தாராவின் தந்தை குரியன் உடல்நலக்குறைவால் கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனைக்கு செல்லும் முன் மகளிடம் திருமணம் குறித்து அவர் பேசியுள்ளார். அதற்கு நயன்தாரா சம்மதம் தெரிவித்துவிட்டதாக தெரியவந்துள்ளது. இதனால் விரைவில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவுக்கு திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
 

From Around the web