துருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது...? சர்பரைஸ் பதில் அளித்த கவுதம் மேனன்..!

 
கவுதம் மேனன்

விக்ரம் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக, துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை இயக்குநர் கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு துவங்கப்பட்ட படம் துருவங்கள் பதினாறு. அதே வேகத்துடன் படத்திற்கான சிறிய டீசரும் வெளியானது. அதை தொடர்ந்து இதன் மீது தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் மிகுந்த எதிர்பார்ப்பு கொண்டிருந்தனர்.

ஆனால் டீசர் வெளியாகி சுமார் 4 ஆண்டுகள் கடந்தும் இதுவரை படம் தொடர்பான எந்தவித அப்டேட்டும் வெளியாகவில்லை. எனினும் கவுதம் மேனன் தொடர்ந்து மற்ற நடிகர்கள் நடிக்கும் படங்களை இயக்கி வந்தார். 

இதுதொடர்பாக பலர் கேள்விகள் கேட்டாலும் மவுனம் மட்டுமே அவரிடமிருந்து பதிலாக வந்தது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக படத்தின் தயாரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டன.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற வலையொளி நேர்காணலில் பேசிய இயக்குநர் கவுதம் மேனன், துருவ நட்சத்திரம் படத்தின் ஷூட்டிங் அனைத்தும் முடிவடைந்துவிட்டது. இன்னும் 10 நாட்கள் மட்டுமே இறுதிக்கட்ட வேலைகள் நடைபெறவேண்டியுள்ளது.

இந்தாண்டு இறுதிக்குள் படத்தை நிச்சயமாக வெளியிட்டு விடுவோம் என்கிற நம்பிக்கை எழுந்துள்ளது என்று கூறியுள்ளார். இது படத்தை எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் மற்றும் விக்ரம் பட ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From Around the web