பொன்னியின் செல்வன் ரிலீஸ் எப்போது..? நடிகர் கார்த்தி சொன்ன பதில் இதுதான்..!

 
பொன்னியின் செல்வன் ரிலீஸ் எப்போது..? நடிகர் கார்த்தி சொன்ன பதில் இதுதான்..!

கடந்த 60 ஆண்டுகளாக பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக உருவாக்க தமிழ் சினிமா முயன்று வரும் நிலையில், அது தற்போது சாத்தியமாகியுள்ளது என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழில் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ள படம் ‘சுல்தான்’. இந்த படத்தின் சக்ஸஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. அப்போது படக்குழுவினருடன் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நடிகர்களும் கலந்துகொண்டனர்.

அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய கார்த்தி, தன்னுடைய அடுத்த படம் ‘பொன்னியின் செல்வன்’ இரு பாகங்களாக தயாராகி வருகிறது. இதனுடைய 70 சதவீத படப்பிடிப்பு பணிகள் முடிந்துவிட்டன. கொரோனா பிரச்னையால் மீதமுள்ள படப்பிடிப்புகளை மேற்கொள்வது சிரமமாகவுள்ளது.

ஐந்து பாகங்கள் கொண்ட பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்கள் கொண்ட படமாக உருவாக்கி வருகிறோம். இது ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து கற்பனையில் எழுதப்பட்ட கரை.

இந்த படத்தில் ஐம்பத்துக்கும் மேற்பட்ட முக்கிய கதாபாத்திரங்கள் உள்ளன. ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயராம், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை 2022-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டு வருகிறோம்.

கடந்த 60 வருடங்களாக தமிழ் சினிமா இந்நாவலை திரைப்படமாக்க முயற்சித்து வருகிறது. ஆனால் அது பல்வேறு வகையில் சாத்தியமல்லாமல் போனது. இன்றைய தொழில்நுட்பங்களின் உதவிகளை கொண்டு பொன்னியின் செல்வன் கதை சினிமாவில் சாத்தியமாக்கப்பட்டு வருகிறது.

From Around the web