ஆர்.ஆர்.ஆர் படப்பிடிப்பு மீண்டும் துவக்கம்- எப்போதான் ரிலீஸ்..!

 
ஆர்.ஆர்.ஆர் பட போஸ்டர்

கொரோனா ஊரடங்குக்கு பிறகு ஆர்.ஆர்.ஆர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதை அடுத்து முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர், நடிகையர்கள் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகின்றனர்.

பாகுபலிக்கு பிறகு ராஜமவுலி இயக்கி வரும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. சமீபத்தில் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலானது. அப்போது படம் அக்டோபரில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து ஷூட்டிங் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராஜமவுலி படத்திற்கான ஷூட்டிங் பணிகள் துவங்கியுள்ளன. முன்னதாக ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன.

தற்போது கதாநாயகியாக நடிக்கும் ஆலியா பட் படப்பிடிப்புக்கு திரும்பியுள்ளதை அடுத்து, அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. பாகுபலியை தொடர்ந்து இந்திய சினிமாவின் அடுத்த பிரமாண்ட படைப்பாக இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web