எப்போது மீண்டும் டி.வி-க்கு வருவீர்கள்- அர்ச்சனா சொன்ன பதில் இதுதான்..!

 
அர்ச்சனா


சமூகவலைதளத்தில் ரசிகர்களுடன் நேரலையில் கலந்துரையாடி அர்ச்சனா, மீண்டும் தொலைக்காட்சிக்கு திரும்புவது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

விஜய் டிவியில் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியை மா.க.ப. ஆனந்தனுடன் சேர்ந்து அர்ச்சனா தொகுத்து வழங்கி வந்தார். அப்போது அவருடைய மூலையில் செரிப்ரோஸ்பைனல் திரவக் கசிவு ஏற்பட்டது. இதற்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதன்காரணமாக அவர் தொலைக்காட்சி பக்கம் இன்னும் வரவில்லை. இந்நிலையில் தனது யூ-ட்யூப் சேனல் மூலமாக நேரலையில் ரசிகர்களிடம் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், மீண்டும் தொலைக்காட்சி பக்கம் வருவதற்காக தயாராக இருக்கிறேன். ஆனால் எனது தொடையில் 16 தையல்கள் போடப்பட்டுள்ளன.

செரிப்ரோஸ்பைனல் திரவக் கசிவை நிறுத்துவதற்கு அங்கிருந்து தோல் மற்றும் தசைகள் வெட்டப்பட்டுள்ளன. படப்பிடிப்புக்கு சென்றால் குறைந்தது 15 மணி 16 மணிநேரம் வரை நிற்க வேண்டும். இப்போதைய சூழலில் அது முடியாது என்பதால், இன்னும் போகவில்லை.

வரும் செப்டம்பர் 3-ம் தேதி மேலும் ஒரு பரிசோதனை உள்ளது. அதை முடித்துக்கொண்டு வரும் செப்டம்பர் 10-ம் தேதி மீண்டும் தொலைக்காட்சியில் பணிக்கு செல்வேன் என நம்புவதாக அர்ச்சனா கூறியுள்ளார். அவர் மீண்டும் நலம்பெற்று வரவேண்டும் என பலரும் ஆசி கூறியுள்ளனர்.

From Around the web