முதலாவது கட்சி மாநாடு எங்கே? எப்போது தெரியுமா? முழு விபரம்..!
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக காணப்படுபவர் விஜய். இவர் சுமார் ஒரு படத்திற்கு தற்போது இருநூறு கோடி ரூபாய் வரை வாங்குகின்றார். ஆனாலும் இன்னும் ஒரு படத்துடன் சினிமா துறையில் இருந்து முற்றிலுமாக விலகி அரசியலில் முழு நேரமாக பயணிக்க உள்ளதாக அறிவித்திருந்தார்.
2026ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது தான் தமது நோக்கு என்று தனது பயணத்தை மக்களுக்காக ஆரம்பிக்க உள்ளார். இதன் காரணத்தினால் விஜயின் ரசிகர்கள் மிகுந்த கவலையில் காணப்படுகின்றார்கள். ஆனாலும் அவர் மக்களுக்காக ஆற்றப் போகும் சிறந்த பணிகளுக்காக தமது வரவேற்பினையும் கொடுத்துள்ளார்கள்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு எங்கே? எப்போது? நடக்கும் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
அதன்படி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு எதிர்வரும் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் விஜய். தற்போது இது தொடர்பான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு உள்ளார்.
— TVK Vijay (@tvkvijayhq) September 20, 2024
— TVK Vijay (@tvkvijayhq) September 20, 2024