வைரலாகும் ‘வலிமை’ படத்தின் விசில் தீம்..!

 
1

நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு எச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் பாடல், போஸ்டர் மற்றும் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. இதில் அஜித் ஜோடியாக கியூமா குரோஷி நடித்துள்ளார். அடுத்து 3வது முறையாக மீண்டும் வினோத் இயக்கும் படத்தில் அஜித் நடிக்க உள்ளார்.

வலிமை திரைப்படம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி மாதம் 13-ம் தேதி வெளியாக இருக்கிறது. முன்னதாக டைரக்டர் விக்னேஷ்சிவன் எழுதி யுவன் சங்கர் ராஜா மற்றும் அனுராக் குல்கர்னி ஆகியோர் பாடியிருந்த ‘நாங்க வேற மாறி’ பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் தற்போது வலிமையின்  விசில் தீம்  வெளியிட்டுள்ளனர், இது ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக மாறியுள்ளது.எப்போதும் அஜித் - யுவன் கூட்டணி என்றால் பிஜிஎம்மும், தீம் மியூசிக்கும் வேற லெவலில் இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்து. அதற்கு, ‘பில்லா’, ’மங்காத்தா’ படங்களின் இசையே பெரும் சாட்சியாக உள்ளது. இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள விசில் தீமிற்கும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

From Around the web