யாரு சாமி நீங்க ? அப்படியே நடிகர் யோகி பாபு போலவே இருக்க.!

 
1

யோகி பாபு பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்திருக்கிறார். இவர் நடித்த பீஸ்ட், கோலமாவு கோகிலா, லவ் டுடே, கோமாளி போன்ற பல படங்களில் இவரது கதாபாத்திரம் பலராலும் பேசப்பட்டு வந்தது.

மேலும், யோகி பாபு ஒரு காலத்தில் வாய்ப்பைத் தேடி அலைந்து சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து விடாமுயற்சியுடன் இந்த நிலைக்கு வந்திருக்கிறார். தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருதை வழங்கி கௌரவித்துள்ளது. இவர் 300 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘பொம்மை நாயகி’ திரைப்படம் மிகுந்த கவனம் பெற்றது. மேலும் யோகிபாபு ரஜினியுடன் ஜெய்லர் படத்திலும், ஷாருக்கான் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ஜவான்’ படத்திலும் நடித்துள்ளார்.

உலகில் ஒருவரை போல் 7 பேர் இருப்பார்கள் என சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறோம். அதை நாம் கண்ணில் காணும் போது ஆச்சிரப்பட்டும் இருக்கிறோம்.

1

அப்படி சமீபத்தில் அனைவரையும் மணிபாலன் என்பவர் ஆச்சிரப்பட்ட வைத்துள்ளார். அச்சு அசல் அப்படியே நடிகர் யோகி பாபு போலவே இருப்பவர் தான் இந்த மணிபாலன். பலரும் இவர் தான் யோகி பாபு என்று நினைத்து செல்பி எல்லாம் கூட எடுத்துக்கொள்வதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

From Around the web