யாருப்பா இவரு..! அப்படியே அச்சு அசல் ரஜினியைப் போன்று இருக்காரு..!
வீடியோவில் இருப்பவர் ரஜினிதான் என தெரியாத நபர்கள் பலர், பாருங்கள் ரஜினி சார் எவ்வளவு எளிமையாக இருக்கிறார் என்று கூறி இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். வீடியோவில் இடம்பெற்றுள்ள நபர் பவுன்சர்களுடன் கை குலுக்கிக் கொள்கிறார். முடியையும் ரஜினியை போன்று ஸ்டைலாக கோதி விடுகிறார்.
இவர் யார், இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்த சரியான தகவல்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. வீடியோவுக்கு நெட்டிசன்கள் தாறுமாறாக கமென்ட் செய்து வருகின்றனர்.
இவர் ரஜினிதான் என மேலோட்டமாக பார்க்கும் யாரும் நம்பும் அளவுக்கு, ஒரு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் இடம்பெற்றுள்ள நபர் அச்சு அசல் ரஜினியைப் போன்று தோற்றம் கொண்டவராகவும், அவரைப் போன்று ஸ்டைல் செய்பவராகவும் இருக்கிறார்.
இவர் எளிமையான மனிதர்னு சொல்லுவானுங்க ஆனா இவளோ எளிமையானவரான்னு இப்ப தான் ஆச்சர்ய படுறேன்.... pic.twitter.com/pIbxiVYlpX
— 🔥 DESPOTER 🔥 (@despoters_12345) October 20, 2023