புதிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் யார்..? நடுவர் யார்..?

 
புதிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் யார்..? நடுவர் யார்..?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகவுள்ள புதிய பிக்பாஸ் ஜோடி ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள போட்டியாளர்கள் மற்றும் நடுவர்கள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன.

குக் வித் கோமாளி சீசன் 2 மூலம் கிடைத்த டி.ஆர்.பி-யை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் விஜய் டிவி தொடங்கியுள்ள புதிய இரண்டு நிகழ்ச்சிகள் தான் மிஸ்டர் & மிஸஸ் சின்னதிரை மற்றும் பிக்பாஸ் ஜோடிகள்.

இதில் மிஸ்டர் & மிஸஸ் சின்னதிரை நிகழ்ச்சி கடந்த வாரம் முதல் ஒளிப்பரப்பாக துவங்கியுள்ளது. இந்த வார இறுதி நாட்கள் முதல் புதியதாக ஒளிப்பரப்பாகவுள்ள நிகழ்ச்சி தான் பிக்பாஸ் ஜோடிகள்.

இதுவரை ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்களை ஜோடிகளாக பிரித்து, பல்வேறு டாஸ்கள் மூலம் சிறந்த ஜோடி யார் என்பதை தேர்வு செய்வதே இந்நிகழ்ச்சியின் நோக்கம். இதற்கு பிரபலமான இரண்டு பேர் நடுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


அந்த வகையில் சீசன் 4 போட்டியாளர்களான அனிதா - ரமேஷ், ஷிவான் - சோம் சேகர், கேபி - ஆஜீத் ஆகியோரு போட்டியாளர்காள உள்ளனர். அதே சமயத்தில் சீசன் 3 போட்டியாளரான பாலாஜி மற்றும் சீசன் 4 போட்டியாளரான நிஷா இருவரும் ஒரு ஜோடிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சீசன் 1 போட்டியாளரான ஜூலி மற்றும் சீசன் 2 போட்டியாளரான செண்ட்ராயன் ஒரு ஜோடிகளாகவும், சீசன் 3 போட்டியாளர்களான மோகன் வைத்தியா மற்றும் பாத்திமா பாபு ஒரு ஜோடிகளாகவும், சீசன் 2-ல் பங்கேற்ற ஷாரீக் மற்றும் சீசன் 3-ல் பங்கேற்ற வனிதா, சீசன் 4-ல் பங்கேற்ற சம்யுக்தா ஆகிய மூவரும் மற்றொரு ஜோடிகளாகவும் உள்ளனர்.

இந்நிகழ்ச்சிக்கான ப்ரோமோ பாடலில் தோன்றும் சாண்டி இந்த ஜோடிகளுக்கான நடனப் பயிற்சியை வழங்குவார் அல்லது நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரமாண்டமாக தயாராகவுள்ள இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 
 

From Around the web