தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா..?
Updated: Mar 17, 2025, 23:28 IST

ஒவ்வொரு படத்தின் வெற்றியின் பின்னரும் ஹீரோயின்கள் தங்களது சம்பளம் அதிகரித்து செல்கின்ற மரபு தொடங்கியுள்ளது. இந்த வரிசையில் தற்போது முன்னனி நடிகைகளின் சம்பள விபரங்கள் வெளியாகியுள்ளது.
தற்போது சாய்பல்லவி அமரன் படத்தின் பின்னர் 18-20 கோடி சம்பளம் பெற்று முன்னனியில் இருக்கின்றார்.அடுத்தபடியாக நயன்தாரா தற்போது சுந்தர்சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தில் நடிப்பதற்காக 15 கோடி சம்பளம் வேண்டியுள்ளார். அடுத்ததாக ராஷ்மிகா மந்தனா புஷ்பா 2 வெற்றியை தொடர்ந்து ஒரு படத்தில் நடிக்க 13 கோடி சம்பளம் வாங்குகின்றார். மேலும் அடுத்து திரிஷா 12 கோடி சம்பளம் வாங்குகின்றார். அடுத்து சமந்தா ஒரு படத்தில் நடிப்பதற்காக 10 கோடி சம்பளம் பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.