தொகுப்பாளினி டிடி-யின் முன்னாள் கணவரின் இரண்டாவது மனைவி இவரா..?

 
டிடி-யின் முன்னாள் கணவர் ஸ்ரீகாந்த்

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி விவாகாரத்து செய்த ஸ்ரீகாந்தின் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியாகியுள்ளது.

தமிழின் முன்னணி தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் டிடி. விசில், சர்வம் தாளமயம், பா. பாண்டி போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு இயக்குநர் கவுதம் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்த ஸ்ரீகாந்த் என்பவருடன் டிடி-க்கு திருமணம் நடந்தது. கல்யாணமான சில ஆண்டுகளில் இருவரும் பரஸ்பரமான விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இருவருடைய பிரிவு தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாகின. ஆனால் அதை டிடி மற்றும் ஸ்ரீகாந்த் தரப்பில் உறுதிசெய்யப்படாமல் இருந்தது. விவகாரத்தை தொடர்ந்து டிடி மீண்டும் நிகழ்ச்சிகளில் பிஸியானார்.

இந்நிலையில அவருடைய முன்னாள் கணவர் ஸ்ரீகாந்துக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளது. அதுதொடர்பான புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

From Around the web