அந்நியன் இந்தி ரீமேக்கில் சதா ‘நந்தினி’-ஆக நடிப்பது யார் தெரியுமா..?

 
அந்நியன் இந்தி ரீமேக்கில் சதா ‘நந்தினி’-ஆக நடிப்பது யார் தெரியுமா..?

பாலிவுட்டில் ஷங்கர் இயக்கத்தில் தயாராகும் ‘அந்நியன்’ படத்தின் ரீமேக்கில் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகி குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

கடந்த 2005-ம் ஆண்டு தமிழில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘அந்நியன்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. விக்ரம், சதா, விவேக், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படம் தெலுங்கு, இந்தி மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.

தற்போது இந்த படத்தை இயக்குநர் ஷங்கர் இந்தியில் ரீமேக் செய்யவுள்ளார். ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்களில் நடிப்பவரின் விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் பதிப்பில் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஆனால் இந்தி பதிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

தற்போது இந்த படத்தில் கதாநாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் தெலுங்கு படத்திலும் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

From Around the web