ஹீரோவாக கால்பதிக்கும் காளி வெங்கட்- இயக்குநர் யார் தெரியுமா..? 

 
காளி வெங்கட்

முக்கியமான குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து கவனமீர்த்த நடிகர் காளி வெங்கட் விரைவில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் சினிமாவில் வெளியான பல்வேறு படங்களில் முக்கிய குணச்சித்திர கதாபாத்திரங்கள் நடித்ததன் மூலம் தடம் பதித்தவர் காளி வெங்கட். இவருடைய நடிப்பு உடன் நடிக்கும் ஹீரோ நடிகர்களுக்கே சவால் விடும் வகையில் இருப்பது காளி வெங்கட்டின் சிறப்பு.

இந்நிலையில் ஆடை படத்தை தயாரித்த விஜ் சுப்பிரமணியம் அடுத்ததாக தயாரிக்கும் புதிய படத்தில் காளி வெங்கட் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக பிக்பாஸ் சீசன் 2 வின்னர் ரித்விகா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை பிரம்மா என்கிற புதுமுக இயக்குநர் இயக்கவுள்ளார். இந்த படத்தின் டைட்டில் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளவர்களின் விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

From Around the web