அந்தாதுன் தமிழ் ரீமேக்கில் வனிதா யாருக்கு ஜோடி தெரியுமா..?

 
அந்தாதுன் தமிழ் ரீமேக்கில் வனிதா யாருக்கு ஜோடி தெரியுமா..?

அந்தாதுன் தமிழ் ரீமேக்கில் வனிதா விஜயகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதை அடுத்து, அவரு யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்கிற விபரங்கள் தற்போது தெரியவந்துள்ளன.

இந்தியில் வெளியான ‘அந்தாதுன்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் நடித்ததற்காக கதாநாயகன் ஆயுஷ்மான் குரானாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. தற்போது இந்த படம் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்ய பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழில் உருவாகும் அந்தாதுன் ரீமேக்கிற்கு அந்தகன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் கதாநாயகனாக பிரசாந்த் நடிக்கிறார். கதாநாயகியாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் பிக்பாஸ் புகழ் வனிதாவை படக்குழு ஒப்பந்தம் செய்தது. அவர் படப்பிடிப்பில் பங்கேற்ற புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகின. அவர் இந்த படத்தில் இணைந்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அந்தகன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் சமுத்திரகனி நடிக்கிறார். அவருடைய மனைவி கதாபாத்திரத்தில் வனிதா விஜயகுமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிம்ரனுக்கும் அவருக்கும் படத்தின் ஒரு சண்டைக் காட்சி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 
 

From Around the web