முத்து படத்தில் வயதான ரஜினி வேடத்தில் முதலில் நடிக்க இருந்தவர் இவரா..? 

 
ரஜினிகாந்த்

முத்து படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருப்பார். இதில் வயதான கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் தொடர்பான விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் வெளியான ‘தேமாவன் கொம்பத்து’ படத்தின் தமிழ் ரீமேக் தான் ‘முத்து’. ஆனால் படத்தின் கதைக்கருவை மட்டும் எடுத்துக்கொண்டு ஒட்டுமொத்த திரைக்கதையையும் ரஜினிக்கு ஏற்றவாறு மாற்றி இயக்கி இருந்தார் கே.எஸ். ரவிக்குமார்.

அதனால் இதுவரை தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஹிட்டடித்த படங்களின் வரிசையில் முத்துவுக்கு தனி இடம் உண்டு. மேலும் இந்த படத்தில் ரஜினிகாந்த் வேலைக்காரன் மற்றும் வயதான முதியவர் என இரண்டு வேடங்களில் நடித்து அசத்தி இருப்பார்.

ஆனல் வயதான ரஜினி கதாபாத்திரத்திற்கு தேர்வானவர் மற்றொரு நடிகர். அதனுடைய விபரங்கள் தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி முன்னதாக வினு சக்கரவர்த்தி அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான பரிசீலனையில் இருந்துள்ளார். பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அந்த கதாபாத்திரத்தையும் கடைசியில் ரஜினியே செய்துள்ளார்.

மேலும், நடிகர் ரஜினிகாந்தின் எஜமானி கதாபாத்திரத்தில் நடித்தவர் மலையாள சினிமாவின் முன்னணி நடிகை ஜெயபாரதி. ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்வானவர் ஊர்வசி. ஆனால் அவர் நடித்தால் ரஜினிகாந்த் கதாபாத்திரம் வலுவிழக்கக்கூடும் என படக்குழு நினைத்ததால் கடைசியில் ஜெயபாரதி நடித்தது குறிப்பிடத்தக்கது. 
 

From Around the web