யார் ஆட்சிக்கு வந்தாலும் நான் அப்படித்தான் பேசுவேன் - பார்த்திபன்..!

 
1

சுமார் 11 ஆண்டுகள் கழித்து மீண்டும் மலையாளத்தில் கே.சி கௌதமன் இயக்கத்தில் நடிக்கின்றார் பார்த்திபன். அதன் பின்பு ‘54ஆம் பக்கத்தில் மயிலிறகு’ என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார்.

இந்த நிலையில், ‘54ஆம் பக்கத்தில் மயிலிறகு’  படத்தின் படப்பிடிப்பு தொடர்பாக பொதுச்சேரி பொதுப்பணி மற்றும் சுற்றுலா துறை அமைச்சரை சந்தித்து பேசி உள்ள பார்த்திபன், அதன் பின்பு செய்தியாளர்களுக்கு வழங்கிய பேட்டி வைரலாகி வருகின்றது. அதில் அவர் விஜயின் அரசியல் வருகை பற்றி தெரிவித்துள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். முதலமைச்சர் ஆக ஆசைப்படலாம். இதனால் இவ்வாறு வருபவர்களை முதலில் வரவேற்போம். முதலில் அவர்கள் அவர்களுடைய வேகத்திற்கு போகட்டும். 

இதில் தடை இருக்குமா என்றால் நிச்சயம் இருக்கும். ஏனென்றால் ஜல்லிக்கட்டிலேயே நிறைய தடைகளை தாண்டி தான் மாடு பிடிக்க வேண்டும். அதேபோலத்தான் ஆட்சியைப் பிடிப்பது மிகப்பெரிய விஷயம். இதில் வரும் தடைகளை தாண்டி வெற்றி பெறுவது தான் தலைவனுக்கு அழகு.

 ஆரம்பத்தில் எல்லாருக்கும் கூட்டம் வரும். அதன் பின்பு இந்த கட்சி நிலைக்குமா என்ற சந்தேகம் எல்லோருக்கும் காணப்படும். நீங்க ஆளும் கட்சியை விமர்சனம் பண்ணினால் தான் அடுத்த கட்டத்திற்கு வர முடியும். எம்ஜிஆர், கலைஞர் போன்றவர்களும் இப்படித்தான் செய்தார்கள். அவர்களை விட நல்லது செய்கின்றார்கள் என்று சொன்னால் முடியாது. அப்படி எந்த பக்கமும் சாயாமல் ஒரு தலைவனால் இருக்கவும் முடியாது.

நான்  ஸ்டாலினுக்கு மேடையில் வைத்து பொன்னாடை போர்த்தினேன். அதேபோல விஜய் அரசியலுக்கு வந்த போதும் பேசினேன். அதற்காக நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் கிடையாது. விஜய் பற்றி பேசுவதால் அவரிடம் இரண்டு பெட்டியை வாங்கி விட்டதாக அர்த்தம் இல்லை. யார் ஆட்சிக்கு வந்தாலும் நான் அப்படித்தான் பேசுவேன். 

என்னுடைய அரசியல் நோக்கம் என்பது ஏற்கனவே இருப்பது போல் அல்லாமல் புதிய மாற்றம் ஏற்பட வேண்டும். அதுதான் நல்ல விஷயம். அதை என்னால் பண்ண முடியாது. என்னுடைய கவனம் முழுவதும் சினிமாவில் இருக்கின்றது. தற்போது எனக்கு சின்ன வயது என்பதால் இன்னும் கொஞ்சம் வயது போக அதைப்பற்றி யோசிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

From Around the web