31 வயது சிறிய நடிகையுடன் நடித்தது ஏன்..? சல்மான் கான் ஓபன் டாக்..! 

 
1

 சிக்கந்தர் படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் ரஷ்மிகா. 59 வயதாகும் சல்மான் கானுக்கு 28 வயதாகும் ரஷ்மிகா ஜோடியா என சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள். மகள் வயது ரஷ்மிகாவுக்கு போய் ஜோடியாக நடித்திருக்கிறாரே இந்த சல்மான் கான் என்கிறார்கள்.

இந்நிலையில் மும்பையில் நடந்த சிக்கந்தர் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இந்த வயது வித்தியாசம் பற்றி பேசினார் சல்மான் கான். அவர் கூறியதாவது,

ஹீரோயினுக்கும், எனக்கும் இடையே 31 வயது வித்தியாசம் இருக்கிறது என பேசுகிறார்கள்.வயது வித்தியாசத்தால் ஹீரோயினுக்கு பிரச்சனை இல்லை, அவரின் அப்பாவுக்கும் பிரச்சனை இல்லை. அப்படி இருக்கும் போது உங்களுக்கு என்ன பிரச்சனை?. ரஷ்மிகாவுக்கு திருமணமாகி மகள் பிறந்தால் அவருடனும் சேர்ந்து நடிப்பேன் என்றார்.

சல்மான் கானுக்கும், ரம்ஜான் பண்டிகை ரிலீஸுக்கும் ஒரு ராசி இருக்கிறது. ரம்ஜான் பண்டிகை ஸ்பெஷலாக சல்மான் கானின் படங்கள் ரிலீஸானால் அது கண்டிப்பாக வெற்றி பெறும். இந்நிலையில் ரம்ஜானுக்கு வரும் சிக்கந்தர் படமும் கண்டிப்பாக பெரிய அளவில் வெற்றி பெறும் என நம்பப்படுகிறது.


ஆமீர் கானின் கஜினி படம் மூலம் பாலிவுட் சென்ற ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருக்கும் நான்காவது இந்தி படம் சிக்கந்தர். பாலிவுட்டின் மூன்று முக்கிய கான்களில் இரண்டு கான்களை வைத்து படம் எடுத்துவிட்டார். இன்னும் பாக்கி இருப்பது ஷாருக்கான் தான்.


அடுத்ததாக ஷாருக்கான் படத்தையும் இயக்கிவிட்டால் பாலிவுட்டின் மூன்று கான்களையும் இயக்கிய பெருமையை பெறுவார் ஏ.ஆர். முருகதாஸ்.


மக்கள் தான் சல்மான் கான், ரஷ்மிகாவின் வயது வித்தியாசம் பற்றி தீவிரமாக பேசி வருகிறார்கள். ரஷ்மிகாவோ சல்மான் கானுடன் சேர்ந்து நடித்துவிட்டேனே, இதைவிட வேறு என்ன வேண்டும் என சந்தோஷமாக இருக்கிறார்.

சாவா எனும் சூப்பர் ஹிட் படத்தை அடுத்து ரஷ்மிகா நடிப்பில் வெளியாகும் படம் சிக்கந்தர். பாலிவுட்டின் ராசியான ஹீரோயின் என பெயர் எடுத்துவிட்டார் ரஷ்மிகா மந்தன்னா என்பது குறிப்பிடத்தக்கது.


 


 

From Around the web