இந்தியில் பேசியவரை அடித்தது ஏன்..? பிரகாஷ் ராஜ் விளக்கம்...!

 
ஜெய் பீம் படத்தில் பிரகாஷ் ராஜ்

சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெய் பீம்’ படத்தில் இந்தி பேசும் நபரை அடித்தது தொடர்பாக அந்த காட்சியில் நடித்த பிரகாஷ் ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான ‘ஜெய் பீம்’ படத்தில் இந்தியில் பேசுவரை பிரகாஷ் ராஜ் அடிக்கும் காட்சி சர்ச்சையானது. இதையடுத்து இந்தி ஆதரவாளர்கள் பலர் விமர்சனம் தெரிவித்திருந்தனர்.

இதுதொடர்பாக பிரபல செய்தி ஊடகமான ‘நியூஸ் 9’ தொலைக்காட்சிக்கு பிரகாஷ் ராஜ் பதிலளித்துள்ளார். அதில், சில விஷயங்களை ஆவணப்படுத்த வேண்டும். ஒரு வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி, உள்ளூர் மொழி தெரிந்த ஒருவர், கேள்வி கேட்காமல் இருக்க இந்தியில் பேசுவதாக தெரிந்தால், வேறு எப்படி நடந்து கொள்வார்? அது ஆவணப்படுத்தப்பட வேண்டும். 

பழங்குடி மக்களின் பிரச்னையை பேசும் இந்த படத்தில், அவர்கள் தொடர்பான பிரச்னையை எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் பேசுவதில்லை. மாறாக என்னை விமர்சிக்கும் விதமாக நடந்து கொள்கிறார்கள். இதுபோன்ற விஷயங்களுக்கு எதிர்வினையாற்றுவதில் அர்த்தமில்லை என்று பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

From Around the web