'நாம் இருவரும் ஏன் முன்பே சந்திக்கவில்லை'  - பிரேம்ஜிஜை போட்டோ போட்டு கலாய்த்த இந்து..!

 
1

பல ஆண்டுகளாக சிங்கிளாக இருந்த பிரேம்ஜிக்கு அண்மையில் தான் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

திருத்தணி முருகன் கோவிலில் நண்பர்கள், உற்றார் உறவினர்கள் மட்டும் சூழ மிக எளிமையாக இவர்களது திருமணம் நடந்தது. ஆனால் பலரும் வியக்கும் வகையில் இவர்களது ரிசப்ஷன் நடைபெற்றது.

வல்லவன் என்ற படத்தில் மூலம் நடிகராக அறிமுகமானவர்தான் பிரேம்ஜி. அதற்கு முன் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்துள்ளார். 2023 ஆம் ஆண்டு வெளியான சத்திய சோதனை படத்திலும் நாயகனாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது 1998ஆம் ஆண்டு பிரேம்ஜி எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், அதே ஆண்டு இந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டு 'நாம் இருவரும் ஏன் முன்பே சந்திக்கவில்லை' என தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் பிரேம்ஜியின் மனைவி இந்து'

இதை பார்த்த ரசிகர்கள் பிரேம்ஜிஜை நல்லா கலாய்ச்சிட்டு இப்போ லவ் டயலொக் வீட்டுரிங்களா? என கிண்டலடித்து  வருகின்றார்கள்.

From Around the web