”ஏன் தனுஷ் ப்ரோ இப்படி பண்றீங்க..?” கர்ணனை கிண்டலடித்த நடிகர் விவேக்..!

 
”ஏன் தனுஷ் ப்ரோ இப்படி பண்றீங்க..?” கர்ணனை கிண்டலடித்த நடிகர் விவேக்..!

தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தை பார்த்துவிட்ட நடிகர் விவேக் படம் தொடர்பான தனது கருத்தை தனக்குரிய பாணியில் நகைச்சுவையுடன் ட்விட்டரில் பதிவுசெய்துள்ளது வைரலாகியுள்ளது.

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கர்ணன்’. நேற்று வெளியான இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. தனுஷ் நடிகர்கள் மட்டுமில்லாமல் பல்வேறு சினிமா ஆர்வலர்களும் இந்த படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர்.


திரையரங்குகளில் வெளியான முதல் நாள் முதல் காட்சி முதலே படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த படத்திற்கும் விருதுகள் குவியும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பல்வேறு பிரபலங்களும் இந்த படத்தை பார்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் கர்ணன் படத்தை பார்த்துவிட்ட நடிகர் விவேக், அதை பாராட்டி தனக்குரிய பாணியில் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். ”எப்பவாவது ஹிட் குடுத்தா ஓகே. எப்ப பாத்தாலும் ஹிட் குடுத்தா எப்பிடி தனுஷ் ப்ரோ?!?!” என்று நடிகர் தனுஷை டேக் செய்து அவர் பதிவிட்டுள்ளது பல்வேறு ரசிகர்களை கவர்ந்துள்ளது.

From Around the web