இன்னும் என்ன நீங்க பைத்தியக்காரனாவே நெனச்சுட்டு  இருக்கீங்கள..? சிறகடிக்க ஆசை டைரக்டரை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

 
1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ்க்கு 30 லட்சம் ஜீவா அனுப்பிய காட்சி இருந்தது என்பதை அனைவரும் பார்த்திருப்போம். அந்த பணத்தை மனோஜ் மற்றும் ரோகிணி என்ன செய்யப் போகிறார்கள் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், இன்னொரு பக்கம் ஒரே நாளில் ஒரே பணப்பரிமாற்றத்தில் 30 லட்ச ரூபாய் அனுப்ப முடியுமா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

அனைத்து வங்கிகளிலும் ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட தொகை மட்டுமே அனுப்ப முடியும் என்று ஒரு நிபந்தனையை வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் ஒரே நாளில் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை தான் அனுப்ப முடியும் என்றும் அதிலும் புதிதாக ஒரு நபருக்கு அனுப்ப வேண்டும் என்றால் அவருக்கு அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் மட்டுமே அனுப்ப முடியும் என்றும் வங்கி விதிகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் புதிதான ஒருவரை நமது benficiary ஆக சேர்த்தால் உடனே பணம் அனுப்ப முடியாது. குறைந்தது ஒரு மணி முதல் 24 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும். ஆனால் ஜீவா, உடனே மனோஜ் அக்கவுண்டிற்கு பணம் அனுப்புவது தான் சந்தேகமாக உள்ளது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் ஜீவா, மனோஜின் அக்கவுண்ட்டிற்கு முதல்முதலாக பணம் அனுப்பும் நிலையில் அவர் எப்படி 30 லட்சம் அனுப்புகிறார்? இப்படி காதல் பூ சுத்துகிறீர்களே? என்று ரசிகர்கள் ’சிறகடிக்க ஆசை’ இயக்குனருக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர். சீரியலாக இருந்தாலும் அதிலும் ஒரு லாஜிக் வேண்டாமா? எந்த வங்கியில் ஒரே நாளில் 30 லட்ச ரூபாய் அனுப்ப அனுமதிக்கிறார்கள்? என்ற கேள்வியை அடுத்தடுத்து பலர் கேட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From Around the web