தமிழ் சினிமாவை விட மலையாள சினிமா ஏன் முன்னேற்றம் காண்கிறது - பயில்வான் ரங்கநாதன்..! 

 
1

தமிழ் சினிமாவை விட மலையாள சினிமா ஏன் முன்னேற்றம் காண்கிறது என்பதற்கு பயில்வான் ரங்கநாதன் பல காரணங்களை தெரிவித்தார். அதில், மலையாள சினிமாவில் ரஜினி, கமலுக்கு இணையான புகழை கொண்டவர்கள் மம்மூட்டி, மோகன்லால். ரஜினி இங்கு 200 கோடி சம்பளம் வாங்குகிறார். ஆனால் மலையாளத்தில் 10 கோடிக்கு மேல் தாண்டுகிறார்களா என்பதே சந்தேகம் தான். ஏனெனில் மலையாளத்தில் கதைதான் ஹீரோ. படத்திற்கான செலவுக்குத்தான் பணத்தை அதிகமாக செலவிடுகின்றனர்.

இதனால், நல்ல கதைகொண்ட படங்கள் மலையாளத்தில் அதிகம் வருகிறது. வெற்றி பெறும் படங்களாக அமைகிறது. ஒரு படத்தில் நடிக்க பயில்வான் போகும் போது அந்த படத்தில் மீனாவும் இருந்துள்ளாராம். அவருக்கு உதவியாளராக இரண்டு பேர் தான் இருந்தனர். ஆனால் அவ்வை சண்முகி படத்தில் நானும் நடித்தேன். அப்போது மீனாவுக்கு உதவியாளராக 7 பேர் இருந்தார்கள். இதுதான் மலையாள சினிமாவிற்கும் தமிழ் சினிமாவிற்கும் உள்ள வித்தியாசம் என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்தார்.

From Around the web