வயது குறைவானவரை திருமணம் செய்வது ஏன்..? மாளவிகா சொன்ன பதில்..!

 
மாளவிகா

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மாளவிகா தன்னை விட வயதில் இளையவரை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் முந்தைய சீசனில் பங்கேற்றவர் மாளவிகா. அதன்மூலம் தேசியளவில் கவனமீர்த்தவர், சில ஆண்டுகள் கழித்து இந்தியில் ஒளிப்பரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இதன்மூலம் கணிசமான ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கிக்கொண்டார். தற்போது தேசியளவில் பிரபலமான அவர் வலம் வருகிறார். அண்மையில் அஸ்வின் கஷ்யப் என்கிற வளர்ந்து வரும் தொழிலதிபரை திருமணம் செய்யவுள்ளார்.

இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள மாளவிகா, தன்னை திருமணம் செய்யும் நபர் தன்னை விட ஒரு வயது இளையவர். பெண்ணை விட பையன் வயது அதிகமாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரை பிரச்சினை கிடையாது. புரிதல் தான் முக்கியம் என்று கூறினார்.
 

From Around the web