51 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாதது ஏன்?

 
1

தாயின் மணிக்கொடி, இருவர், சினேகிதியே,காதல் தேசம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகை தபு. கடைசியாக திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த அலா வைகுந்தபுரமுலோ படத்தில் நடித்திருந்தார். 

இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகை தபுவுக்கு தற்போது 51 வயது ஆகிறது. தபுவும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. பின்னர் அந்த காதல் முறிந்து விட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தனக்கு திருமணம் நடக்காமல் போனதற்கு இந்தி நடிகர் அஜய் தேவ்கன் காரணம் என்று தபு தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, ‘‘எனக்கு ஆரம்பத்தில் இருந்தே அஜய் தேவ்கனை தெரியும். எனது சகோதரனுக்கு அவர் நெருங்கிய நண்பர். நாங்கள் மும்பை ஜுஹூ பகுதியில் வசித்தோம். அப்போது எனது ஒவ்வொரு செயலையும் அஜய் தேவ்கன் கவனித்துக்கொண்டே இருப்பார்.

நான் எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து வருவார். வேறு பையனுடன் நான் பேசுவது அவருக்கு பிடிக்காது. அந்த பையனுடன் சண்டை போடுவார். அதனால்தான் நான் திருமணம் செய்து கொள்ளாமல் அப்படியே இருந்துவிட்டேன்” என்றார்.

From Around the web