எதற்காக 18 சதவீத வரி கட்ட வேண்டும்..? நடிகை மீரா சோப்ரா ஆவேசம்..!

 
எதற்காக 18 சதவீத வரி கட்ட வேண்டும்..? நடிகை மீரா சோப்ரா ஆவேசம்..!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சுவாசிக்க ஆக்ஸிசன் கிடைக்காமல், படுக்கை வசதிகள் இல்லாமல், பாதிப்பு சரியாக மருந்து கூட கிடைக்காமல் பலரும் அவதிப்பட்டு வரும் சூழலில் நான் ஏன் 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டும் என நடிகை மீரா சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழில் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் வெளியான ‘அன்பே ஆருயிரே’ படம் மூலம் சினிமாவில் கால்பதித்தவர் மீரா சோப்ரா. அந்த படத்தில் தன்னுடைய பெயரை நிலா என்று மாற்றிக்கொண்டார். பிறகு அர்ஜுனுடன் மருதமலை, ஜெகன்மோகினி போன்ற படங்களில் நடித்தார்.

இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் ‘கில்லாடி’. அதற்கு பிறகு பெரும்பாலும் இந்தி மற்றும் தெலுங்குப் படங்களில் நடிக்க அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் தன்னுடைய பெயரை மீரா சோப்ரா என்று மாற்றிக்கொண்டார்.


இந்நிலையில் நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து, மத்திய அரசை விமர்சித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. “என்னுடைய நெருங்கிய உறவினர் இருவர் கொரோனா பாதிப்பால் இறந்துவிட்டனர். பெங்களூரில் இருந்த ஒரு உறவினருக்கு உரிய நேரத்தில் ஆக்ஸிஜன் கிடைக்காமல், படுக்கை கிடைக்காமல் இறந்து போனார்.

இதை கொரோனாவால் ஏற்பட்ட மரணம் என்று சொல்வதா? அல்லது கொலை என்பதா? அரசாங்கம் முடங்கிப்போனதே என்னுடைய உறவினர் மறைவுக்கு காரணம். இப்படியொரு உதவியற்ற மற்றும் பொறுப்பற்ற நிலையை முன் எப்போதும் கண்டதில்லை. உடலும் மனமும் மறத்துப் போய்விட்டதால் சினம் கூட வரவில்லை.  இந்தியாவில் நிலை பரிதாபமாக உள்ளது. 

மேலும் தன்னுடைய ட்வீட்டில், அவசர நேரத்தில் கிடைக்காத மருத்துவ உதவி எதுவும் பிற்காலத்தில் பலனிக்காது. சுவாசிக்க காற்றும், நிம்மதியான வாழ்க்கையும் கிடைக்காத சூழலில்  என்னுடைய 18 சதவீத ஜி.எஸ்.டி வரியை நான் கட்டமாட்டேன் என்று தெரிவித்துள்ள மீரா சோப்ரா, அந்த ட்வீட்டில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ரகுநாத் தாகூர் மற்றும் பிரதமர் மோடியை டேக் செய்துள்ளார்.

From Around the web