நான் ஏன் இல்லாத கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் - இயக்குனர் பாலா..!
Jan 3, 2025, 14:32 IST
பாலா இயக்கத்தில் வெளியான சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி என அனைத்து படங்களுமே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றி படமாக அமைந்தது. மேலும் இவருடைய படங்களும் பல விருதுகளை வென்றிருக்கும் நிலையில் இவரும் சிறந்த இயக்குனருக்கான பல்வேறு விருதுகளை வென்று குவித்துள்ளார். அந்த வகையில் நான் கடவுள் படத்திற்காக இயக்குனர் பாலாவிற்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் இயக்குனர் பாலாவிடம், தேசிய விருது பெற்றதற்காக நீங்கள் கடவுளுக்கு நன்றி சொன்னீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பாலா, “நான் கடவுள் படத்தில் கடவுளா வந்து நடித்தார்? கடவுளா வந்து மேக்கப் போட்டார்? கடவுளா வந்து அலங்காரம் செய்தார்? கடவுளா வந்து கேமராவை ஆப்ரேட் செய்தார்? கஷ்டப்பட்டு நடித்தது நடிகர், நடிகைகள். கஷ்டப்பட்டு உழைத்தது தொழிலாளர்கள். இந்த ஒற்றுமை தான் தேசிய விருது கிடைப்பதற்கு காரணம். இல்லாத ஒருவருக்கு நான் ஏன் நன்றி சொல்ல வேண்டும்?” என்று பதிலளித்துள்ளார்
இயக்குனர் பாலா இயக்கத்தில் தற்போது வணங்கான் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. அருண் விஜய் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் நிலையில் இப்படம் வருகின்ற ஜனவரி 10ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.