நடிகர் விவேக் நடித்த காட்சிகளை இந்தியன் 2 படத்தில் இருந்து நீக்கமா ?

 
1

விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டே துவங்கிய இந்தப் படம் படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்து, கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்றது. மேலும் லைக்காவுக்கும் ஷங்கருக்கும் பட்ஜெட் தொடர்பான முரண் காரணமாகவும் இந்தப் படம் தாமதமானதாக கூறப்படுகிறது.

ஒரு வழியாக சிக்கல்கள் தீர்ந்து இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்தப் படத்தின் 11வது ஷெட்யூல் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஷெட்யூலில் தொடர்ந்து 30 நாட்கள் படப்பிடிப்பை நடத்த கமல்ஹாசன் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

vivek

‘இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசன் , காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சித்தார்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம், மாரிமுத்து, வெண்ணிலா கிஷார், சிவாஜி குருவாயூர் ஆகியோர் வில்லன்களாக நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக நடிகர் விவேக்கின் நீண்ட நாள் ஆசை இந்தியன் 2 படம் மூலம் நிறைவேறியது. இந்த படத்தில் நடிக்க கமிட் ஆகி படப்பிடிப்பிலும் கலந்துகொண்டு நடித்தார் விவேக். ஆனால் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடியும் முன்னரே அவர் உயிரிழந்து விட்டார். இதனால் இந்தியன் 2 வில் அவரது காட்சிகளுக்கு மாற்றாக வேறு காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

Vivek shankar

ஆனால் தற்போதைய தகவலின் படி, இந்தியன் 2 படத்தில் விவேக் தொடர்பான காட்சிகள் நீக்கப்படவோ அல்லது அதற்கு பதிலாக வேறு காட்சிகள் எடுக்கப்படவோ இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாக வில்லை. அவர் தொடர்பான காட்சிகள் இருக்கிறதா..இல்லையா? என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம். கிட்டத்தட்ட 6 வில்லன்கள் இடம்பெற்றுள்ள இந்தப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை தனுஷ்கோடியில் படமாக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

From Around the web