ஓ.டி.டி-யில் ரிலீஸாகிறதா கோப்ரா..? உண்மை இதுதான்..!

 
ஓ.டி.டி-யில் ரிலீஸாகிறதா கோப்ரா..? உண்மை இதுதான்..!

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படம் ஓ.டி.டி-யில் ரிலீஸாகும் என்கிற தகவல் கோலிவுட் முழுக்க பேசப்பட்டு வரும் நிலையில், அதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் உரிய விளக்கம் அளித்துள்ளது.

டிமாண்ட்டி காலனி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘கோப்ரா’. விக்ரம் கதாநாயகனாகவும், கே.ஜி.எஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் இர்பான் பதான் வில்லனாக நடித்துள்ளார். மொத்தம் 7 கெட்-அப்புகளில் கோப்ரா படத்தில் விக்ரம் வருகிறார். அதனால் தமிழ் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து வரும் படமாக உள்ளது கோப்ரா

இந்த படத்தில் இளம் நடிகர் ரோஷன் ஆண்ட்ரூஸ், மியா ஜார்ஜ், ரோபோ ஷங்கர், ஆனந்த் ராஜ், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஸ்ரேயா கோஷல் பாடும் பாட்டு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.


கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ரஷ்யா சென்ற படக்குழு அங்கு விக்ரம் சம்மந்தப்பட்ட காட்சிகளை 13 நாட்கள் எடுத்தது. அதை தொடர்ந்து மீண்டும் படக்குழு சென்னை திரும்பியுள்ளது. இந்த சூழ்நிலையில் நாட்டில் கொரோனா அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் கோப்ரா படம் ஓ.டி.டி-யில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள தயாரிப்பு நிறுவனம், கோப்ரா படத்தில் 95% படப்பிடிப்பு பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன. மீதி 5%  பணிகள் பாக்கியுள்ளன. வரும் ஜூலை மாதம் இந்த படத்தை வெளியிட படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து  திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ‘கோப்ரா’ படம் ஓடிடி தளமாக நெட்ஃப்ளிக்ஸ்-ல் வெளியாகவுள்ளதாக கூறப்படுவது தவறு. இது ஒரு பொய்யான செய்தி என விளக்கம் அளித்துள்ளது. 
 

From Around the web