வெங்கடேஷ் பட் பதிலாக நடுவர் ஆகப்போவது இவரா..?

 
1
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர் வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோர்களும் வெளியேறிய நிலையில் அடுத்த சீசன் கேள்விக்குறியானது.

இந்த நிலையில் தற்போது விஜய் டிவி வட்டாரம் இது குறித்து கூறிய போது ஐந்தாவது சீசன் கண்டிப்பாக இருக்கும் என்றும், புதிய நடுவர் மற்றும் புத்தம் புதிய அம்சத்துடன் நிகழ்ச்சி விரைவில் தொடங்கும் என்றும் கூறினார்.இந்த நிலையில் குக் வித் கோமாளி ஐந்தாவது சீசனில் நடுவர் தாமுடன் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் என்பவர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ’மெகந்தி சர்க்கஸ்’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் அது மட்டும் இன்றி பல திரையுலக பிரபலங்களின் வீடுகளில் நடந்த நிகழ்ச்சிக்கு இவர்தான் கேட்டரிங் சர்வீஸ் செய்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. சமையல் கலையின் வல்லுனரான இவர் பிரதமர் முதல் முதல்வர் வரை கலந்து கொண்ட நிகழ்ச்சியின் விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோமாளிகளை வைத்து புரமோ வீடியோ தயாராகி வருவதாகவும் விஜய் டிவி தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

எனவே புத்தம் புதிய அம்சத்துடன் புதிய நடுவர்களுடன் எதிர்பாராத போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web