கர்ணன் ரிலீஸ் தள்ளிப்போகுமா..? திரையரங்களுக்கு தமிழக அரசு புதிய கட்டுப்பாடு..!

 
கர்ணன் ரிலீஸ் தள்ளிப்போகுமா..? திரையரங்களுக்கு தமிழக அரசு புதிய கட்டுப்பாடு..!

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

உலகளவில் கொரோனா இரண்டாவது ஆலை பல்வேறு தாக்கத்தை உருவாக்கியுள்ளது. இந்தியாவிலும் இது வெறியாட்டம் ஆட துவங்கியுள்ளது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 10-ம் தேதி முதல் திரையரங்குகள் அனைத்தும் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே செயல்பட வேண்டும் என உத்தரவி பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது திரையரங்க உரிமையாளர்களுக்கு அதிர்ச்சிய ஏற்படுத்தியுள்ளது. நாளை தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம் திரைக்கு கொண்டுவரப்படவுள்ளது. நாளை கர்ணன் படம் வெளியாகவுள்ளதால், அரசின் இந்த உத்தரவு படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதனால் கர்ணன் படத்தின் வெளியீடு தள்ளிப்போகுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. மேலும் முன்னதாக வெளியான சுல்தான் படத்தின் வசூலும் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படும் என விபரம் அறிந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 

From Around the web