விரைவில் மாவீரன் படம் ஓடிடியில் வெளியாகிறதா ?

சிவகார்த்திகேயனுடன் அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா, யோகிபாபு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருக்கும் படம் மாவீரன். இந்தப் படம் கடந்த 14ம் தேதி திரையரங்குகளில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. ரசிகர்களின் வரவேற்பையும் வசூலையும் குவித்துவரும் இந்தப் படம் கடந்த 11 நாட்களில் 75 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளதாக படக்குழு சார்பில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அப்டேட் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக சிவகார்த்திகேயனின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் படங்கள் சிறப்பான வெற்றியை அவருக்கு கொடுத்திருந்தது. ஆனால் மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் வெளியான பிரின்ஸ் படம் அவருக்கு சொதப்பலாகவே அமைந்தது. இந்நிலையில் தற்போது மடோன் அஷ்வின் இயக்கத்தில் வெளியாகியுள்ள மாவீரன் படம் சிவகார்த்திகேயனுக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது.
தற்போது கமல் தயாரிப்பில் உருவாகிவரும் SK21 படத்தின் சூட்டிங்கிற்காக காஷ்மீரில் உள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் சூட்டிங்கிலிருந்து இடைவெளி எடுத்துக் கொண்டு, மாவீரன் படத்தின் பிரமோஷனுக்காக அவர் சென்னை வந்திருந்தார். தொடர்ந்து சென்னை, ஐதராபாத் என தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களை அவர் சந்தித்து, பல பேட்டிகளையும் கொடுத்திருந்தார். இந்நிலையில், படத்தின் வெற்றி விழாக் கொண்டாட்டமும் நடத்தப்பட்டுள்ளது.
இதனிடையே ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் மாவீரன் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அப்டேட்டும் தற்போது வெளியாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 3ஆவது வாரத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளதாக படக்குழு சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவீரன் படம் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. விரைவில் இந்தப் படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து சிவகார்த்திகேயன் கேரியரில் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.