பவர் ஸ்டார் சீனிவாசனுக்கும் வனிதாவுக்கும் திருமணமா..? வைரலாகும் புகைப்படம்..!

 
வனிதா விஜயகுமார்

நகைச்சுவை நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கும் நடிகை வனிதாவுக்கும் திருமணம் நடந்தது போன்ற புகைப்படம் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு யூ- ட்யூப் சேனல் தொடங்கினார் வனிதா. அதற்காக தொழில்நுட்ப உதவிகளை செய்து வந்த பீட்டர்பால் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில மாதங்களில் அவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, பீட்டர்பாலை பிரிந்து வாழ்ந்து வருகிறார் வனிதா.

அடுத்ததாக அவர் வேறு ஒரு நபரை திருமணம் செய்யவுள்ளார், அவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் என்கிற கிசு கிசு பரவலாக பரவி வருகிறது. இந்நிலையில் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் நகைச்சுவை நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் வனிதா.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் வனிதாவுக்கு வாழ்த்து கூறி இடுகை பதிவிட்டு வருகின்றனர். எதற்காக இந்த புகைப்படத்தை வனிதா பதிவிட்டார் என்பது குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை. இதற்கிடையில் அனைத்து சமூகவலைதள பக்கங்களிலும் இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.

From Around the web