அரசி கல்யாணம் நடக்குமா? கதறி அழும் கோமதி..!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 2 டுடே எபிசோட்டில் அரசி வராததால் ஹாலிலே நிற்கிறாள் சுகன்யா. அப்போது கோமதி, ராஜி, மீனா ஒவ்வொருவராக வந்து அரசி எங்கே என கேட்கிறாள். அவள் தூங்கி விட்டதாக அனைவரையும் சமாளிக்கிறாள் சுகன்யா. ரொம்ப தூக்கம் வரலன்னு உலவிட்டு இருந்தாள். இப்போ தான் தூங்குறா. அவள் ரெஸ்ட் எடுக்கட்டும் என சொல்லி மூவரையும் அனுப்பி வைக்கிறாள்.
இதனையடுத்து மறுநாள் காலையில் எல்லாரும் கல்யாணத்துக்கு ரெடி ஆகின்றனர். கோமதி ஒரே பதட்டத்தில் இருக்க, நீ ஏன் டென்ஷனா இருக்க. நல்லபடியா எல்லாம் நடக்கும் என பாண்டியன் சொல்கிறான். அதனை தொடர்ந்து மீனா, ராஜி, மயில் என ஒவ்வொருவராக ரெடியாகி வருகின்றனர். அதனை தொடர்ந்து டைம் ஆகிருச்சு அரசியை எழுப்பி ரெடி பண்ணுங்க என்கிறாள் கோமதி.
அவர்களும் மாமியார் சொன்னபடி அரசியை எழுப்ப வருகின்றனர். ஆனால் ரூமுக்குள் அவள் இல்லை. இதனையடுத்து ஒவ்வொரு இடமாக தேட ஆரம்பிக்கின்றனர். மாடியிலும் போய் பார்க்க அங்கேயும் அவள் இல்லை. சரி குளிக்க போயிருப்பாள் என நினைத்து அங்கு போய் பார்க்க, அண்ணி குளித்து விட்டு வருகிறாள். இதனையடுத்து அவர்கள் அங்கும் இங்குமாக அழைந்து கொண்டு இருக்கவும் கோமதி நிப்பாட்டி, என்னடி அரிசியை கூப்பிட சொன்னேன். நீங்க சுத்திட்டு இருக்கீங்க என கேட்கிறாள்
அப்போது அரசியை ரூம்ல காணோம் அத்தை. தேடி பார்த்தோம் எங்கயும் இல்லை என சொல்கிறார்கள். இதனைக்கேட்டு கோமதி அதிர்ச்சியடைய மயில், கதிர், செந்தில், சரவணன் எல்லாரும் தேட ஆரம்பிக்கின்றனர். வீட்டில் எங்கு தேடியும் இல்லாததால் பதட்டப்படுகின்றனர். அப்போது கல்யாணத்துக்கு வந்து இருப்பவர்கள், என்ன கல்யாண பொண்ணை காணோம்ன்னு சொல்றீங்க என கேட்க ஆரம்பிக்கின்றனர்.
அப்போது ஒருத்தன் குமாரை அரசியை லவ் பண்ணதா நாங்க கேள்விப்பட்டது எல்லாம் உண்மை தான் போல என சொல்கிறான். இதனால் பாண்டியன் டென்ஷனாகி என் மகள் அப்படியெல்லாம் கிடையாது. நீ வாயை மூடுயா என சொல்கிறான். மீனாவும் என்ன நேரத்துல என்ன பேசிட்டு இருக்கீங்க என கடுப்பாகிறாள். அப்போது கல்யாணத்துக்கு முன்பாக அரசி தங்களிடம் பேசி வந்ததை கதிர் நினைத்து பார்க்கிறான். இந்த விஷயத்துல குமாருக்கு எதுவும் சம்பந்தம் இருக்குமோ என யோசிக்கிறான்.
அவனும் வீட்டில் உள்ளவர்களிடம் இந்த விஷயத்துல குமாருக்கு எதுவும் சம்பந்தமா இருக்குமா என கேட்கிறான். இதனால் அனைவரும் ஷாக் ஆகின்றனர். சுகன்யாவும் பயத்தில் நடுங்குகிறாள். உடனே கோமதியும் போச்சே என கதறி அழுக ஆரம்பிக்கிறாள். அவளை சமாதானப்படுத்தும் பாண்டியன், கத்தி ஊரை கூட்டாதடி என்கிறான். அப்போது செந்தில் எனக்கும் அவன்மேல தான் சந்தேகமா இருக்கு என சொல்கிறான்.
உடனே சரவணன் நான் போய் பார்க்குறேன். அவன் மட்டும் வீட்ல இல்லைன்னா செத்தான் என ஆவேசமாக சொல்கிறான். அண்ணன் தம்பி சேர்ந்து கிளம்ப முடிவு செய்ய, சுகன்யா அவர்களை தடுக்கிறான். அப்போது பழனி நீ எதுக்காக அவுங்களை தடுக்குற? இந்த விஷயத்துல அவன் மட்டும் தலையிட்டு இருந்தால் செத்தான் என சொல்கிறான். அதற்கு சுகன்யா அதுக்கு இல்லங்க, நான் போய் காதும் காதும் வைச்ச மாதிரி பார்த்துட்டு வரறேன் என சொல்லிவிட்டு போகிறாள்.
அங்கு போய் சக்திவேலிடம் குமார் எங்கே என விசாரிக்கிறாள். அவன் நைட்ல இருந்து காணோம்மா என சொல்ல, நடந்த விஷயங்களை சுகன்யா சொல்கிறாள். இதனைக்கேட்டு சக்திவேல் ஒரு பிளான் போடுகிறான். இப்படியாக இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் நிறைவடைந்தது.