காஞ்சனா படத்தின் 4-ம் பாகம் உருவாகுமா? – நடிகர் லாரன்ஸ் சொல்வதென்ன…!

 
1

ராகவா லாரன்ஸ் நடித்த ‘முனி‘ பேய் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தொடர்ச்சியாக காஞ்சனா 2-ம் பாகம் மற்றும் 3-ம் பாகங்களை இயக்கி நடித்து இருந்தார். இந்த படங்கள் வெளியகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் 4-ம் பாகம் உருவாகுமா? என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் காஞ்சனா 4-ம் பாகம் உருவாக வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து லாரன்ஸிடம் கேட்டபோது  அவர் கூறியதாவது, “தற்போது சில படங்களில் பிஸியாக நடித்து வருகிறேன். என் கைவசம் உள்ள படங்களை முடித்த பிறகு காஞ்சனா 4-ம் பாகம் எடுப்பது குறித்து யோசிப்பேன்“ என்றார். லாரன்ஸ் நடித்துள்ள ‘ருத்ரன்‘ படம் தமிழ் புத்தாண்டில் திரைக்கு வருகிறது. அடுத்து வெற்றி மாறன் தயாரிக்கும் அதிகாரம் படத்தில் நடிக்கிறார். பி.வாசு இயக்கத்தில் நடிக்கும் ‘சந்திரமுகி 2‘ பட வேலைகளும் இறுதிகட்டத்தில் உள்ளது. லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் படமொன்றிலும் நடிக்க இருக்கிறார்.

From Around the web