யோஹான் படம் வருமா ? இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் சொல்வதென்ன..! 

 
1

லியோ படத்தின் சக்சஸ் மீட் சில தினங்களுக்கு முன்னர் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.லியோ படத்தில் விஜய்யுடன் கெளதம் மேனன் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். இருவரது காம்போவும் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. முன்னதாக விஜய் – கெளதம் மேனன் கூட்டணியில் யோஹான் அத்தியாயம் ஒன்று என்ற திரைப்படம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது.

விஜய் – கெளதம் மேனன் – ஏஆர் ரஹ்மான் என மாஸ் கூட்டணியில் உருவாகவிருந்த யோஹான், அதன்பின்னர் டேக் ஆஃப் ஆகவில்லை. ஜேம்ஸ் பாண்ட் பட சீரிஸ் டைப்பில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக யோஹான் உருவாகவிருந்தது. விஜய்யை மிக வித்தியாசமான கேரக்டரில் இயக்கவிருந்தார் கெளதம். அதுமட்டும் இல்லாமல் இந்தப் படம் 7 பாகங்கள் வரை உருவாகலாம் என சொல்லப்பட்டது.

ஆனால், இப்போது ஒரு பாகம் கூட இல்லாமல் அப்படியே ட்ராப் ஆகிவிட்டது. இந்நிலையில் இந்தப் படம் குறித்து கெளதம் மேனன் மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது யோஹான் திரைப்படம் இனிமேல் உருவாக வாய்ப்பில்லை எனக் கூறியுள்ளார். அந்த கதைக்காக எழுதியிருந்த பல காட்சிகளை மற்ற படங்களில் பயன்படுத்திவிட்டதாகவும், அதனால் யோஹான் உருவாகாது எனவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டும் இல்லாமல் விஜய் இப்போது ரொம்பவே மாறிவிட்டதாக கெளதம் மேனன் கூறியுள்ளார். விஜய் மாஸ் ஹீரோவாகிவிட்டதால், இனி அவருக்காக ஸ்பெஷலாக ஒரு கதை எழுதவிருப்பதாகவும், வாய்ப்பிருந்தால் அந்தப் படம் விரைவில் உருவாகும் எனவும் கெளதம் தெரிவித்துள்ளார். இதனால், சீக்கிரமே விஜய் – கெளதம் மேனன் கூட்டணி இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web