இனி படங்களில் நடிப்பேனா..? சிறுத்தை சிவாவிடம் கண்ணீர் சிந்திய ரஜினிகாந்த்..!
அண்ணாத்த படத்தை தொடர்ந்து இனிமேல் படங்களில் தன்னால் நடிக்க முடியுமா என்று கூறி இயக்குநர் சிறுத்தை சிவாவிடம் நடிகர் ரஜினிகாந்த் கவலையுடன் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘தர்பார்’ படத்தை தொடர்ந்து ‘சிறுத்தை’ சிவா இயக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மீனா நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் குஷ்பு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
மேலும் படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நயன்தாரா இந்த படத்தில் நடிக்கிறார். ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கும் ஐந்தாவது படமாக இது தயாராகி வருகிறது. சன் பிக்சர்ஸ் மிக பிரமாண்டமான பொருட்செலவில் இந்த படத்தை தயாரித்து வருகிறது.
இந்நிலையில் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ பட ஷூட்டிங்கில் சிறுத்தை சிவாவிடம் மனம் விட்டு பேசியுள்ளார். அதில், இன்னும் சில படங்களில் நடிக்க ஆசையாக உள்ளது. கொரோனா பிரச்னை முடிந்தவுடன் அந்த எண்ணம் சாத்தியமாகும். அதற்கு எனது உடல்நிலை அதற்கு ஒத்துழைக்க வேண்டும். அண்ணாத்த படம் இறுதிக்கடத்தை எட்டியுள்ளது. அனைவரும் குடும்பத்தினருடன் பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார்.
 - cini express.jpg)