தளபதி விஜய் அரசியலுக்கு அழைத்தால் வருவீங்களா ? KPY பாலா இது தான்..! 

 
1

சினிமாவையும் தாண்டி தன்னால் முடிந்த உதவிகளை ஏழை மக்களுக்கு செய்து மக்களின் செல்வனாக காணப்படுகிறார் KPY பாலா.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களில் மக்களை மகிழ்விக்கும் நாயகனாக தோன்றி, நாளடைவில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கு பற்றி தனது காமெடி மூலம் மக்களை மகிழ்வித்து இருந்தார்.

இதை தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், சிறப்பு தேவை உடைய நபர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை தேடி கண்டுபிடித்து தன்னால் இயன்ற உதவிகளை செய்து வந்தார். அதிலும் பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் இளைஞன் ஒருவர் ஆசைப்பட்ட பைக்கை வாங்கி அவருக்கே சர்ப்ரைஸ் கொடுத்த வீடியோ பெருமளவில் வைரலானது.

இந்த நிலையில், KPY பாலா அளித்த பேட்டி ஒன்றில் விஜய் அரசியலுக்கு அழைத்தாலும் நான் வரமாட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், எனக்கு போதிய அரசியல் சார்ந்த அறிவு இல்லை. இதனால் தமிழக  வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் என்னை அரசியலுக்கு அழைத்தாலும் நான் வரமாட்டேன். மற்றவர்களுக்கு நான் செய்யும் உதவிகள் எனது திருமணத்திற்கு பின்பும் தொடரும் என்று தெரிவித்துள்ளார். பாலாவின் இந்த முடிவுக்கு பலர் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

From Around the web