கண்டென்ட் & வியூஸ்க்கு என்ன வேணாலும் பண்ணுவீங்களா ஜாக்குலின்..? 

 
1

’கலக்கப்போவது யாரு’ உள்பட ஒரு சில விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் ஜாக்குலின் என்பதும் நயன்தாரா நடித்த ’கோலமாவு கோகிலா’ திரைப்படத்தில் அவருடைய தங்கையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு சில சீரியல்கள் நடித்த ஜாக்குலின் தற்போது இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பதிவு செய்வதில் பிஸியாக உள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஜொமேட்டோ மற்றும் ஸ்விக்கி ஆகிய இரண்டு உணவு டெலிவரி நிறுவனங்களில் ஜாக்குலின் உணவு ஆர்டர் செய்த நிலையில், யார் முதலாவதாக வந்து தனக்கு உணவு டெலிவரி செய்கிறார்களோ, அவர்களுக்கு 500 ரூபாய் பரிசு கொடுப்பதாக வீடியோ ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இதில் ஜொமோட்டோ ஊழியர் முதலில் வந்து அவருடைய ஆர்டர் உணவை கொடுத்த நிலையில் அவருக்கு ஜாக்குலின் 500 ரூபாய் பரிசு கொடுத்த முன் வந்தார். அப்போது ஒரே நிமிட இடைவெளியில் ஸ்விக்கி ஊழியரும் வந்துவிட்ட நிலையில், நீங்கள் அவருக்கு அந்த பணத்தை கொடுங்கள், அவர் குடும்பஸ்தர், நான் பேச்சிலர் தான் என்று தனக்கு வர இருந்த 500 ரூபாயை ஜொமோட்டோ ஊழியர் விட்டு கொடுத்தார்.

மேலும் நான் பக்கத்தில் இருந்து தான் வந்தேன், அவர் தூரத்தில் இருந்து வந்தார் என்று கூறி அந்த பணத்தை அவருக்கு கொடுக்க சொன்னபோது தான் ஜாக்குலின் ஆச்சரியம் அடைந்தார். இதனை அடுத்து ஸ்விக்கி ஊழியருக்கு பணம் கொடுத்த வீடியோவை ஜாக்குலின் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.


 

From Around the web